அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியில் உள்ளது - விஜய பிரபாகரன் அறிவிப்பு
சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.) 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தற்போது தயாராகி வருகிறது. குறிப்பாக புதிதாக கட்சி தொடங்கிய விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்துவதற்கா
விஜய பிரபாகரன் அறிவிப்பு


சென்னை, 11 பிப்ரவரி (ஹி.ச.)

2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் தற்போது தயாராகி வருகிறது. குறிப்பாக புதிதாக கட்சி தொடங்கிய விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அவரது முக்கியமான முயற்சி வலுவான கூட்டணி அமைப்பதே என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, பிரபல தேர்தல் வியூகம் வகிப்பவரான பிரசாந்த் கிஷோர், த.வெ.க-வின் தேர்தல் ஆலோசகராக பொறுப் பேற்றதுடன், பலம் வாய்ந்த கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனையிலும் ஈடுபட்டு வருகிறாராம். அதற்காக த.வெ.க சார்பில் பல்வேறு அரசியல் தலைவர்களை அவர் சந்திக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தேமுதிக முன்னாள் தலைவரான மறைந்த விஜயகாந்தின் மகனும், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளருமான விஜய பிரபாகரன், த.வெ.க உடன் கூட்டணி அமைப்பது பற்றி கூறுகையில், “விஜயகாந்த் 2005-ல் கட்சி தொடங்கி தேர்தலில் 12 சதவீத வாக்குகள் பெற்று அரசியலில் தன்னை நிரூபித்தார். அதே போல் விஜய் தன்னை அரசியலில் நிரூபிக்க வேண்டும். விஜய் அண்ணா தன்னை நிரூபித்த பின்னரே அவருடன் கூட்டணி வைப்பதா இல்லையா என தேமுதிக முடிவு செய்யும். தற்போதைக்கு அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணியில் உள்ளது. தேர்தலுக்கு முன்பு எது வேண்டுமானாலும் மாறலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / J. Sukumar