Enter your Email Address to subscribe to our newsletters
திருச்சி, 2 பிப்ரவரி ( ஹி.ச.)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். இந்த பள்ளியில் நடைபெற்ற மான்போர்ட் சகோதரர்களின் 353 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு பேசினார். இதனை கேட்ட பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்ததோடு, இவ்வளவு பெரிய நடிகரானாலும் யாரையும் மறக்காமல் இருக்கும் சிவகார்த்திகேயனை பாராட்டினார்கள்.
மேலும், இங்குள்ள ஆசிரியர்கள் மீது மிகுந்த அன்புள்ளவன். இங்கே ஜேம்ஸ் என்ற ஆசிரியர் அடித்தால் செவுல் திரும்பிவிடும். நான் வாத்தியார் அடித்ததால் தான் இன்று நன்றாக இருக்கிறேன். இந்தப் பள்ளியை என்றும் மறக்க மாட்டேன், என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
Hindusthan Samachar / J. Sukumar