மாற்றுத்திறனாளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது!
கடலூர், 6 பிப்ரவரி (ஹி.ச.) கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த ரொசாரியோ என்ற 24 வயது இளைஞர் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் வீட்டில் யார
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது


கடலூர், 6 பிப்ரவரி (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த ரொசாரியோ என்ற 24 வயது இளைஞர் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து சிறுமியிடம் இளைஞர் தவறாக நடந்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிறுமியின் குடும்பத்தார் அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் ரொசாரியோவை கைது செய்து போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Hindusthan Samachar / J. Sukumar