Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 7 பிப்ரவரி (ஹி.ச.)
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வாணிப் பிரியா கணவரை பிரிந்து தனது குழந்தைகள் அழைத்துக் கொண்டு கோவை பீளமேடு சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் பகுதிக்கு வந்து வசித்து வந்தார். அப்போது வாணி பிரியாவிற்கும் கோவையைச் சேர்ந்த மகேந்திரன் (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது.
இதை அடுத்து மகேந்திரன் அடிக்கடி வாணிப் பிரியா வீட்டிற்கு வந்து சென்று உள்ளார். இந்த தகவல் பிரபாகரனுக்கு தெரிய வந்து உள்ளது. அதனை பிரபாகரன் கண்டித்து வந்து உள்ளார். ஆனால் அவர் கள்ளக் காதலை கைவிடாமல் மகேந்திரன் உடன் தொடர்ந்து பழகி வந்தார். இந்த நிலையில் வாணிப்பிரியா வீட்டிற்கு பிரபாகரன் வந்தார். அப்போது வீட்டில் மகேந்திரன் இருந்து உள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த அரிவாள் எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டி உள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாணி பிரியா பிரபாகரனை தடுக்க வந்தார். பிரபாகரன் அவரையும் கழுத்தில் வெட்டினார். பின்னர் பிரபாகரன் வீட்டில் இருந்த தனது மகனை அழைத்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதில் மகேந்திரன் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வாணிப்ரியா தனது நண்பருக்கு போன் செய்து தகவலை கூறி உள்ளார். அவர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தெரிவித்து உள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற பீளமேடு போலீசார் பலத்த காயம் அடைந்து இருந்த வாணி பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரபாகரனை தேடி வந்த நிலையில் கொடிசியா பகுதியில் பதுங்கி இருந்த அவரைப் பிடித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . பிக்சர் பிரபாகரனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் காவல் துறையினர்.
Hindusthan Samachar / Durai.J