Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 7 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதாரம் மேம்பாட்டை அதிகப்படுத்தக் கறவை மாடுகளை வாங்குவதற்கான கடன் திட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வர்கிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து அதிகபட்சமாக ஒரு பயனாளிகளுக்கு இரண்டு கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,2000 வழங்கப்படுகிறது. கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வீதம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்க தகுதியாக, பயனாளிகள் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வயது 18 முதல் 60 வரை இருப்பதோடு, அவர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.
சாதி, வருமானம் மற்றும் பிப்பிடச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள், சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ) ஒன்றியம். கூட்டுறவு கடன் சங்கங்கள் (ம) வங்கிகள், ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
Hindusthan Samachar / J. Sukumar