Enter your Email Address to subscribe to our newsletters
தமிழ்நாடு, 8 பிப்ரவரி (ஹி.ச.)
சடகோபன் ரமேஷ், இந்தியத் தேசிய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர். சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 19 தேர்வு கிரிக்கெட் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வு கிரிக்கெட் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2001 - 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
2005-2007 காலப்பகுதியில் கேரளா கிரிக்கெட் அணியிலும், 2007-2008 காலப்பகுதியில் அசாம் கிரிக்கெட் அணியிலும் இணைந்து விளையாடினார். தனது முதலாவது ஒருநாள் போட்டியில் முதலாவது பந்து வீச்சில் ஒரு இலக்கைக் கைப்பற்றிய ஒரே ஒரு இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இவர் கொண்டுள்ளார். இவர் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்த நிக்சன் மெக்லீன் உடையது.
சடகோபன் ரமேஷ் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் மூத்த சகோதரனாக சஞ்சய் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J