Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 9 பிப்ரவரி
(ஹி.ச.)
கர்நாடக மாநிலம், தும்கூர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்த அமோஸ் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் கடந்த 2019 - ம் ஆண்டு கோவையில் உள்ள சில பகுதிகளில் உள்ள பெண்களிடம் அறிமுகம் ஆகி உள்ளனர். அப்போது அவர்கள் கர்நாடகாவில் வெள்ளி ஜரிகையுடனான பட்டுப் புடவை வியாபாரம் செய்து வருவதாகவும், தங்களுக்கு பெரிய ஆர்டர் இருப்பதாகவும், அதற்காக பணம் தேவை என்றும் பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர். அதனை உண்மை என்று நம்பிய பல இடங்களில் கடன் வாங்கி பல தவணைகளில் லட்சக் கணக்கான ரூபாய் அவர்களுக்கு கோவையில் சில பகுதிகளில் அறிமுகமான பெண்கள் கொடுத்ததாகவும், மேலும் பெண்கள், நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களையும் இந்த புடவை வியாபாரத்திற்கு இணைத்து கொண்டு அவர்களிடமும், இருந்த பணத்தை பெற்று அந்த கர்நாடகா தம்பதிக்கு தந்ததாகவும், அந்த பணத்தை அவர்கள் மாதந்தோறும் நேரில் வந்து வாங்கி சென்றதாகவும் கூறியவர்கள்,
பணத்தைப் பெற்ற கர்நாடக தம்பதி 2 பேரும் உறுதி அளித்த படி லாபத் தொகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த உள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டபோது, வெளிநாட்டில் இருந்து சரக்கு வந்து துறைமுகத்தில் இருக்கிறது என்று ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி உள்ளனர். மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த சரக்கை விடுவிக்க லட்சக் கணக்கில் பணம் செலுத்தி வேண்டும் என்று கூறி மேலும் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில் 15 பேரிடம் ஒட்டுமொத்தமாக ரூ.3½ கோடிக்கும் மேல் மோசடி செய்து உள்ளதாகவும், அவர்கள் ஒவ்வொரு முறையும் இந்தப் பெண்களிடம் தவணை தொகை வாங்க வரும் போது ஒரு சிலருக்கு கைகளில் மாந்திரீக கயிறுகளை கட்டி பணம் பெற்று சென்ற உள்ளதாகவும், கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்
தங்களிடம் பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் கூலி வேலை செய்து சேர்த்து வைத்த பணம் மற்றும் நகைகளை அடகு வைத்து கொடுத்த பணம் என்று பலரும் பல லட்சம் பணத்தை இழந்து தற்போது தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாகவும், அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துச் சென்று உள்ளனர்.
பல்வேறு வகையில் பொதுமக்களை ஏமாற்றி நூதன மோசடிகளில் ஈடுபடும் மோசடி சம்பவங்கள் நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / Durai.J