Enter your Email Address to subscribe to our newsletters
கட்டாக் , 9 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. அதன்படி முடிவடைந்த டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்து கோப்பையை இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2 வது ஒருநாள் போட்டி டிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா எஎன்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் வெற்றி அணியே களம் காணக் கூடும். அதே சமயம். காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத கோலி இன்று விளையாடுவாரா என்பதை அணி நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
டி20 தொடரை இழந்த ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதனால் இங்கிலாந்து அணி மாற்றங்களுடன் களம் காண்பது உறுதி. கஸ் அட்கின்சன், மார்க் வுட், ஜேமி ஓவர்டன் ஆகியோர் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar