விஜய் சினிமாவை விட்டுச் சென்றதால் சினிமாவில் எந்த ஒரு இடைவெளியும் இல்லை - நடிகர் சிங்கம் புலி
சென்னை, 11 மார்ச் (ஹி.ச .) சென்னை அடுத்த புழுதிவாக்கத்தில் தனியார் நிகழ்ச்சியில் இயக்குநரும் காமெடி நடிகருமான சிங்கம் புலி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளரை சந்தித்து பேசியவதாவது: ரெட் திரைப்படத்திற்கு பிறகு மாயாவி படத்தை இயக்கினேன் அதன் பிறகு
நடிகர் சிங்கம் புலி பேட்டி


சென்னை, 11 மார்ச் (ஹி.ச .)

சென்னை அடுத்த புழுதிவாக்கத்தில் தனியார் நிகழ்ச்சியில் இயக்குநரும் காமெடி நடிகருமான சிங்கம் புலி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளரை சந்தித்து பேசியவதாவது:

ரெட் திரைப்படத்திற்கு பிறகு மாயாவி படத்தை இயக்கினேன் அதன் பிறகு இயக்குநர் பாலாவுடன் ’நான் கடவுள்’ ‘மாயாண்டி குடும்பத்தார்’ உள்ளிட்ட படங்களில் நடித்தேன் இயக்குநராக இருக்கும் பொழுது நான் பெரிதாக சம்பாதிக்கவில்லை, அதன் பிறகு நடித்தேன். நம்மிடம் ஒரு வறுமை உள்ளது அந்த வறுமையை ஜெயிக்க வேண்டும் என்றால் நடிக்க வேண்டும்.

ஒரு நாள் ஒருவர் ஒரு படத்தை நடித்தால் அடுத்து படம் வரும் என நம்புவோமா ஒரு படத்தை நடிக்கணும் அது எடிட்டிங்கில் மிஞ்சனும் டப்பிங் வரணும் திரையறங்குக்கு வரணும் ரிலீஸ் ஆகணும் ஆடியன்ஸ் கை தட்டனும்

அந்த புரொடியூசர் திருப்பி நம்ம கிட்ட பேசணும் நம்ம டிமாண்ட் பண்ற சம்பளத்தை அவர் கொடுக்கணும் இது எல்லாம் எப்படி வாழ்க்கையில் சாத்தியமாகும். இது எல்லாம் சாத்தியமாக நடந்துள்ளது என்றால் எல்லாம் உங்களால் தான் எனக்கு இந்த நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு நம்ம எதற்கு சென்னைக்கு வந்தோம் இயக்குநர் ஆகணும் தான் வந்தோம் சினிமாவில் சென்று கொண்டே இருக்கின்றோம் சினிமா ஒரு ரயில் போன்றது ஒரு நாள் மூன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு அன்ரிசர்வர்ட் பாத்ரூம் கிட்ட கூட போய் உட்காருவோம், டிடிஆர் சொன்னார் என்றால் இன்ஜினில் கூட சென்று உட்காந்து கொள்வோம், ரயிலை விட்டு இறங்க கூடாது சினிமாவில் எங்கேயாவது ஒரு இடத்திற்கு சென்று கொண்டே இருப்போம்.

விஜய் அரசியல் வருகை அவரோட கொள்கை அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்து தான் நான் அவரை ஆதரித்து என்ன செய்யப் போகிறேன், அவருக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் அவர் எதை நம்பி அரசியலில் இருக்கிறாரோ அதற்கு நாம் வாழ்த்து தான் சொல்ல முடியும்.

அவருடைய அரசியல் வருகையை சந்தோஷமாகத்தான் பார்க்கிறேன் எனக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தெரியும் சைக்கோ படத்தில் நான் நடிக்கும் பொழுது உதயநிதி ஸ்டாலின் எனக்கு அவ்வளவு பிடிக்கும் நான் எவ்வளவு படம் நடித்திருந்தாலும் 2015ல் அவர்களுடைய அரசுதான் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற விருதை அமைச்சர்கள் பெருமக்கள் எல்லாம் எனக்கு ஐந்து பவுன் பதக்கத்தை கொடுத்து என்னை நகைச்சுவை நடிகர் என சப்போர்ட் செய்தார்கள்.

அதேபோல என்னுடைய சொந்தக்காரர் ஒருத்தர் இருக்கிறார் என்னுடைய மாமா ஓபிஎஸ். எதுவாக இருந்தாலும் கட்சி சார்ந்த நாம் இல்லை சினிமாவிடம் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. எல்லாரையும் எல்லா கட்சிகளையும் வாழ்கிறோம் நாளைக்கு நீங்களே கட்சி ஆரம்பித்தாலும் உங்களையும் வாழ்த்துவேன் யாரும் யாருக்கும் பகையாளி கிடையாது நட்பு பாராட்டி போய்க்கொண்டிருப்போம்.

அழகாக இருந்தால் கண்ணுக்கு அழகு எல்லோரும் சேர்ந்து இருக்கணும் எல்லாரும் பயனடைய வேண்டும் எல்லோரும் அன்பாக இருக்க வேண்டும் இவர் பிடிக்கும் இவர் பிடிக்காது என்று என்னுடைய நிலைப்பாட்டில் எதுவுமே கிடையாது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நீயே ஏன் இன்னும் ஷூட்டிங்குக்கு கிளம்பாமல் ரிலீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறாய் கேம் விளையாண்டு கொண்டிருக்கிறாய் என திட்டுறாங்க அதுக்கப்புறம் நான் பார்ட்டி எதற்காவது போகும் போது என்னுடைய நண்பர்களுக்கு ஆக நான் ஏதாவது சாப்பிட வேண்டியது வரும் நமக்குன்னு ஒரு வயசு இருக்கு அந்த வயது வரும் பொழுது எது நல்லது எது கெட்டது என்று நாம் தேர்ந்தெடுத்த நம் வாழ்க்கையை பயணித்துகொள்வோம் என்னைச் சார்ந்த அறிவார்ந்த மக்கள் உள்ளனர் காந்தி அண்ணா காமராஜர் கலைஞர் சொல்லாததையா நாம் சொல்ல போகிறோம் அனைவருக்கும் பட்டு தெரியறது பார்த்து தெரிகிறது பழகி தெரிகிறது என இருக்கிறது எது நல்லதோ அதை போன்ற பின்பற்றினால் நல்லது.

மாயாவி திரைப்படத்தில் எழுதிய வசனம் தான் நான் யாருக்கும் போட்டி கிடையாது எனக்கு யாரும் போட்டி கிடையாது என்னை பார்த்து ஒரு ஒரு பெரிய நகைச்சுவை நடிகருடைய மகனே சொல்லியிருக்கிறார் டி எஸ் பாலையா அப்பாவுடைய அருள் உனக்கு அதிகமாக இருக்கிறது டி எஸ் பாலையா போல் நீ நிறைய பண்ற எனக்கு வந்ததை நான் சிறப்பாக செய்தாலே போதும் எனக்கு போட்டியாக நான் யாரையும் நினைப்பதில்லை அவர்களுக்கு போட்டியாக என்னை யாரும் நினைப்பதில்லை 12:30 ரீல்ல நமக்கு ஒரு ஒன்றரை இல்ல ஒரு ரீல் இருக்கும் அந்த ரீல் முழுவதுமே நம் சிறப்பாக செய்தாலே போதும் அதற்குப் பிறகு ஹீரோயின் வில்லன் இயக்குனர் பார்த்துக் கொள்வார்கள் அந்த ஒன்றரை ரீல் எடிட் செய்யாமல் முழுவதுமாக வந்தாலே போதும் எல்லாம் சரியாகிவிடும்.

ஒரு ஸ்தாபகத்தில் இலவசமாக உணவு போட்டுக் கொண்டிருந்தார்கள் பெரியவர்கள் வந்திருக்கிறார்கள் என்று பிலிம் பிரெஸ்டிவல் படம் பார்த்துவிட்டு அங்கிருந்து ஒரு எட்டு கிலோமீட்டர் நடந்து சென்று கொண்டிருந்தேன், அங்கு இலவசமாக சோறு போடுகிறார்கள் போய் சாப்பிடலாமா என்றேன் அங்கு சென்று சாப்பிடுவதாக இருந்தால் சட்டையை கழட்டிவிட்டு தான் சாப்பிட வேண்டும் என்றார்கள் சட்டையை கழட்டி போட்டு உட்கார்ந்து சாப்பிட்டேன் ஒரு தடவை ரசமும் ஒரு தடவை குழம்பு ஊத்தட்டுமா என்றார்கள். ஒரு தடவை குழம்பு வாங்க ஒரு தடவை ரசம் வாங்கினேன் எல்லாமே இரண்டு இரண்டு தடவை சாப்பிட்டேன் அதை நண்பர்களிடம் சொன்னேன் பிடித்தது அதே என் நண்பர் ராஜ்குமார் இடமும் சொன்னேன் அவன் எப்படி சாப்பிட்டாய் என என்னிடம் கேட்டான் சோறு சோறு குழம்பு குழம்பு ரசம் ரசம் என்ன சாப்பிட்டேன் என்று சொன்னேன் அது அப்படியே டயலாக் வந்துருச்சு.

விஜய் சினிமாவை விட்டு சென்றதால் சினிமாவில் எந்த ஒரு இடைவெளியும் கிடையாது யார் இருந்தாலும் இல்லை என்றாலும் சினிமா போய்க் கொண்டே இருக்கும் சினிமா என்பது வேறு சினிமாவை நான் ஜெயித்து விட்டேன் என்று சொன்னால் அவர்கள் சரியாக படிக்கவில்லை புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் சினிமாவை வைத்து நாம் வெற்றி பெற்றுக் கொள்ள வேண்டியதுதான் சினிமா ஒரு கடவுள் போன்றது அது கண்ணுக்கு தெரியாது அந்த சினிமாவில் யாருக்கும் இடைவெளி இருக்காது நான் சென்றால் இன்னொருத்தர் அவர் சென்றாலும் இன்னொருத்தர் என வந்து கொண்டே இருப்பார்கள் ஆகையால் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்என்று பேசினார்.

Hindusthan Samachar / J. Sukumar