Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 11 மார்ச் (ஹி.ச )
ஜூனியர் செஸ் சாம்பியன் போட்டி மாண்டெனோகுரோ நாட்டில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து 157 பேர் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு வீரர் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.இதன் மூலம் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வெல்லும் நான்காவது இந்தியர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
இதையடுத்து விமானம் மூலம் சென்னை திரும்பிய பிரணவ் வெங்கடேசனை சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.
இதையடுத்து செய்தியளார்களிடம் பேசிய பிரணவ் கூறுகையில்,
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் வென்று உள்ளேன், மிகவும் பெருமையாக உள்ளது ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,அடுத்து உலகக் கோப்பை தகுதிச்சுற்று இந்தியாவில் நடைபெற உள்ளது, எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பை வெல்வது தான் அதில் கவனம் செலுத்த உள்ளேன்.
நான் நன்றாக பயிற்சி எடுத்தேன் அனைத்து சுற்றும் எளிதாகவே இருந்தது, அரசு சார்பில் அனைத்து உதவிகளும் கிடைக்கின்றன, சென்னையில் செஸ் தொடர் நடத்திய முதல்வருக்கும்,துனை முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,சென்னையில் இருந்து அதிகப்படியான வீரர்கள் செஸ் போட்டியில் சாதனை படைத்து வருகின்றனர் அடுத்து சென்னை வீரர்கள் தான் முதன்மையாக இருப்பார்கள் என்றார்.
Hindusthan Samachar / J. Sukumar