Enter your Email Address to subscribe to our newsletters
மெல்போர்ன், 12 மார்ச் (ஹி.ச.)
சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 1877 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், வரும் 2027 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வது ஆண்டு கொண்டாட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே சிறப்பு டெஸ்ட் போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.
2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் அறிவித்துள்ளார். மேலும், இப்போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானத்தில் பிங்க் பந்து டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும்.
1877 ஆம் ஆண்டு மெல்போரினில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதியதில், ஆஸ்திரேலியா வெற்றி வெற்றி பெற்றது. பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டின் 100 வது ஆண்டை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட சிறப்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட்டை கொண்டாடும் விதமாக இதுவரை நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருப்பதால், மூன்றாவது முறையாக நடக்கும் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறுமா ? அல்லது ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததற்கு இங்கிலாந்து அணி பழி தீர்க்குமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Hindusthan Samachar / J. Sukumar