Enter your Email Address to subscribe to our newsletters
தமிழ்நாடு, 20 மார்ச் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.
2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இதை அறிவித்ததை தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு இத்தினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
சர்வதேச மகிழ்ச்சி தினத்தின் நோக்கம் நோக்கம்:
மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் வலியுறுத்துதல்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான கொள்கைகளை உருவாக்குவதற்கு அரசாங்கங்களை ஊக்குவித்தல்.
சர்வதேச மகிழ்ச்சி தினத்தின் முக்கியத்துவம்:
மகிழ்ச்சி என்பது ஒரு தனிப்பட்ட உணர்வு என்றாலும், அதை வளர்க்க வேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
நம் வாழ்வில் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், அதை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிந்திக்கவும் சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.
Hindusthan Samachar / Durai.J