மார்ச் 21 உலக காடுகள் தினம்!
தமிழ்நாடு, 21 மார்ச் (ஹி.ச.) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காடுகள் தினத்தின நோக்கம்: காடுகளின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றில் இருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத
காடு


தமிழ்நாடு, 21 மார்ச் (ஹி.ச.)

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

காடுகள் தினத்தின நோக்கம்:

காடுகளின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றில் இருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

காடுகள் வழங்கும் பல்வேறு நன்மைகள் குறித்து மக்களை அறிவுறுத்துதல்.

வன அழிப்பின் தீமைகளை எடுத்துரைத்தல்.

காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துதல்.

காடுகள் தினத்தின தினத்தின் முக்கியத்துவம்:

பருவநிலையை சீராக வைத்திருக்க உதவுகின்றன.

மண் அரிப்பை தடுக்கின்றன.

உயிரினங்களுக்கு வாழ்விடம் அளிக்கின்றன.

வனங்கள் அழிக்கப்படுவதால் உலகில் வெப்பநிலை கூடுகிறது.

எனவே, காடுகளின் அவசியத்தை உணர்த்த 1971ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Hindusthan Samachar / Durai.J