Enter your Email Address to subscribe to our newsletters
தமிழ்நாடு, 23 மார்ச் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் உலக வானியல் தினம் மார்ச் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இத்தினம் 1950ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகின் தட்பவெப்பநிலை உயர்வால் கடலின் நீர்மட்டம் உயர்கிறது. தற்போது பூமியின் வெப்பநிலையும் கூடிக்கொண்டே செல்கிறது.
அடுத்துவரும் தலைமுறைக்கு வானிலையை சாதகமாக மாற்றிக்கொடுப்பது நம்முடைய கடமையாகும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உலக வானியல் தினம் முக்கியத்துவம்:
வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
உலக வானிலை அமைப்பின் பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துதல்.
வானிலை மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் கல்வியை ஊக்குவித்தல்.
Hindusthan Samachar / Durai.J