மார்ச் 24 சர்வதேச மனித உரிமை மீறல்கள் தினம்
தமிழ்நாடு, 24 மார்ச் (ஹி.ச.) பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமிரோ அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி போராடினார். இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்
மனித உரிமை மீறல் தினம்


தமிழ்நாடு, 24 மார்ச் (ஹி.ச.)

பேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமிரோ அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி போராடினார்.

இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களையும் நினைவுக்கூற இத்தினத்தை ஐ.நா.சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.

சர்வதேச உரிமை மீறல்கள் தினத்தின் நோக்கம்:

மனித உரிமைகள் மீறல்களின் உண்மைகளை வெளிக்கொணர்தல்.

மனித உரிமை மீறல்களுக்கு பலியானவர்களின் கண்ணியத்தை கௌரவித்தல்.

மனித உரிமைகள் மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க மக்களை ஊக்குவித்தல்.

சர்வதேச மனித உரிமை மீறல் தினத்தின் முக்கியத்துவம்:

மனித உரிமைகள் மீறல்கள் என்பது ஒரு உலகளாவிய பிரச்சனை என்பதை நினைவூட்டுகிறது.

மனித உரிமைகள் மீறல்களை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

Hindusthan Samachar / Durai.J