Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 26 மார்ச் (ஹி.ச.)
கோவை ரயில் நிலையத்தில் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜபத் திகல் (வயது 25), கண்டி திகல் (வயது 46), சுலதா நாயக் (வயது 37), ரூபினா நாயக் (வயது 44), ஜோத்ஸ்ராணி திகல் (வயது 44) மற்றும் கெலெய் நாயக் (வயது 32) என்பது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட உலர் கஞ்சாவின் மதிப்பு சுமார் 31 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
Hindusthan Samachar / Durai.J