Enter your Email Address to subscribe to our newsletters
புதுடெல்லி, 27 மார்ச் (ஹி.ச.)
நவம்பர் 2022 முதல் பிப்ரவரி 2025 வரை மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு - CPGRAMS இன் கீழ் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர், பொதுமக்கள் குறை தீர்க்கும் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
நவம்பர் 1, 2022 முதல் பிப்ரவரி 28, 2025 வரை, CPGRAMS-இல் மொத்தம் 52 லட்சத்து 36 ஆயிரத்து 844 குறைகள் பெறப்பட்டதாகவும், 56 லட்சத்து 63 ஆயிரத்து 849 குறைகள் தீர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிப்ரவரி 28 ஆம் தேதி நிலவரப்படி, இந்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 59,946 பொது குறை தீர்க்கும் வழக்குகள் நிலுவையில் இருந்தன. பொதுமக்கள் CPGRAMS மூலம் ஆன்லைனில் குறைகளை சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
பொதுமக்கள் குறை தீர்க்கும் முறைக்கு விரிவான தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV