Enter your Email Address to subscribe to our newsletters
நீலகிரி, 28 மார்ச் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் சிறு விவசாயிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் ஐஏஎஸ் முத்துக்குமார் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
தேயிலை விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான பச்சை தேயிலைக்கு 35 ரூபாய் வழங்குவது குறித்தும் மற்றப் பயிர்களோடு தேயிலையை சேர்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை 1030 மாணவ மாணவியருக்கு 1 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
தேயிலை விவசாயிகளுக்கு விவசாயிகள் உற்பத்தி நலச்சங்கம் மூலம் 30 கோடி மதிப்பில் தேவையான வாகனம் கவாத்து செய்யும் மிசின் மினி தேயிலை தொழிற்சாலை அமைக்க மாணியம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
தரமான பச்சை தேயிலையை விவசாயிகள் வழங்க வேண்டும் என்றும் இந்த ஆண்டு 254 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கென்யா, சைனா,இலங்கை ஆகிய நாடுகள் தேயிலை ஏற்றுமதியில் முதல் மூன்று இடங்களில் இருந்தன தற்போது இலங்கையை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 - ஆம் இடம் பிடித்துள்ளது என தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J