Enter your Email Address to subscribe to our newsletters
புதுச்சேரி, 28 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்த தலைமை பொறியாளர் தீனதயாளன் பொதுப்பணித்துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்காலில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கும் சம்பந்தம் இருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில் பல்வேறு சமூக நல அமைப்பினர் புதுச்சேரி முழுவதும் அமைச்சருக்கு எதிராக போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
அந்த போஸ்டரில் ஊழல் பெருச்சாளி அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலகு அமைச்சரை கைது செய் என்ற வாசகங்களுடன் மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
இதனை அறிந்து அவரது ஆதரவாளர்கள் இன்று போஸ்ட் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய கடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அமைச்சர் மீது அவதூறு பரப்பி போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்திய கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் கிழித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறும்போது...
மக்களை எளிதாக சந்திக்கூடிய ஒரு அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது இதனை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.
Hindusthan Samachar / Durai.J