Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் தமிழரசு (12) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மதியம் தமிழரசு பள்ளிக்கூடம் செல்வதற்காக குளிப்பதற்கு இரும்பு பக்கெட்டில் வாட்டர் ஹீட்டர் மூலம் சுடுதண்ணீர் காய வைத்துள்ளார்.
அப்பொழுது தண்ணீர் சுட்டு விட்டதா என பார்ப்பதற்காக இரும்பு பாக்கெட்டில் உள்ள தண்ணீரைத் தொட்டு பார்த்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தமிழரசு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இச்சம்பவம் அறிந்து விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் தமிழரசின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குறோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J