ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தை உட்பட, 4 பேர் கொலை
கர்நாடகா, 30 மார்ச் (ஹி.ச) கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் உள்ள பேகுரு கிராமத்தைச் சேர்ந்த கிரிஷ் என்பவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாகி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இன்று இவர்களது 5 வயது பெண் குழந்தை உட்பட. வீட்டில்
4 people, including a 5-year-old child belonging to the same family, were killed.


கர்நாடகா, 30 மார்ச் (ஹி.ச)

கர்நாடக மாநிலம் பொன்னம்பேட்டை தாலுகாவில் உள்ள பேகுரு கிராமத்தைச் சேர்ந்த கிரிஷ் என்பவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாகி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று இவர்களது 5 வயது பெண் குழந்தை உட்பட. வீட்டில் இருந்த 4 பேரை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டதாக, அக்கம்பக்கத்தார் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற குற்றவாளி கிரிஷ்ஷை கைது செய்ய தனிக் குழு அமைத்து தேடிப் பிடித்து கைது செய்தனர்.

கொலைக்கான முழுமையான காரணம் விசாரணைக்குப் பின் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.

Hindusthan Samachar / Raj