Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 30 மார்ச் (ஹி.ச)
சென்னை வில்லிவாக்கத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள இறகு பந்து உள் விளையாட்டு அரங்கத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உள் விளையாட்டு இறகுப்பந்து மைதானம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டதாகவும் அதேபோல் கழிவு நீர் அகற்றும் இயந்திரம் மாநகராட்சி பணிக்காக வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கோவில்களில் சாதியின் பெயரால் திருவிழாக்கள் நடத்தக்கூடாது என்கிற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை சட்டத்தின் மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழியில் நடைபெறுகின்ற இந்த அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் பின்பற்றும் இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து இணை ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
சென்னை மாநகராட்சியில் இருந்து இரண்டு கவுன்சிலர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நல பணிகளை செய்யாத போது இன்னவர், இனியவர் என்று பாராமல் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Hindusthan Samachar / Raj