Enter your Email Address to subscribe to our newsletters
ரஷ்யா, 30 மார்ச் (ஹி.ச.)
நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் மார்ச் 30, 1894ல் கார்க்கொவ் அரசு, ரஷ்சியாவில் பிறந்தார்.
இவர் உக்கிரைனில் உள்ள கார்க்கிவ் பல்கலைக்கழகத்தில் 1919ல் பட்டம் பெற்றார்.
கார்க்கிவ் வான்காணக இயக்குநராக 1930ல் பணியாற்றினார். 1934ல் கார்க்கிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். 1943 முதல் 1946 வரை கார்க்கிவ் பல்கலைக்கழக் காப்பாளர் (Rector) ஆக இருந்தார். இவர் 1948ல் உக்கிரைனிய சோவியத் அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினர் ஆனார்.
இவரும் 1961ல் எடுக்கப்பட்ட நிலாவின் சேய்மைப்புற ஒளிப்படங்களின் ஆசிரியர் ஆவார். இது நிலாவின் மறுபக்க நிலப்படம் எனப்பட்டது.
செவ்வாயில் உள்ள பரபாசொவ் குழிப்பள்ளம் 1973ல் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. சோவியத் வானியலாளர் நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக்கால் கண்டுபிடிக்கப்பட்ட 2883பரபாசொவ் எனும் சிறுகோளுக்கு 1978ல் இவரது பெயர் இடப்பட்டுள்ளது. சமவுடைமை உழைப்பு வீர்ர், நான்கு இலெனின் ஆணைகள் மற்றும் உழைப்புக்கான செம்பதாகை ஆணை போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
இரஷ்ய வானியலாளர் நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் ஏப்ரல் 29, 1971ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Hindusthan Samachar / Durai.J