Enter your Email Address to subscribe to our newsletters
தமிழ்நாடு, 30 மார்ச் (ஹி.ச.)
தெலுங்கு, கன்னட மக்களின் வருடப் பிறப்பு யுகாதி பங்குனி வளர் பிறையில் ரேவதி அஸ்வினி முதலிய நட்சத்திரங் களில் சந்திரன் பிரகாசிக்கும்பொழுது யுகாதி பிறக்கிறது திருமலையில் யுகாதி ஆஸ்தானம் அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கும் மூலவர் சந்நதி முதல் கொடிமரம் ரங்கநாதர் மண்டபம் உட்பட கோயில் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்வர் பின்னர் பச்சைக்கற்பூரம் குங்குமம் சந்தனம்,மஞ்சள் உள்ளிட்ட மூலிகைப் பொருட்களைக்கொண்டு தயாரித்த கலவையை கோயில் சுவரில் தெளித்து மூலவருக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பித்து சிறப்புப் பூஜைகள் நடக்கும்.
தங்கக் கதவு அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி காலை 6 மணிக்கு விஸ்வ சேனாதிபதியுடன் இணைந்து ஆனந்த நிலையத்தைச் சுற்றி வலம் வந்து கொலு வைக்கப்படுவார் வருட பஞ்சாங்கத்தை கோயிலின் அர்ச்சகர்கள் வாசிப்பர்.
யுகாதி அன்றைக்கு காலையில் எழுந்து எண்ணெய்க் குளியல் முடித்து புத்தாடை அணிவார்கள் வண்ணக்கோலங்களால் வீட்டை அலங்கரிப்பார்கள் மாவிலைத் தோரணம் கட்டுவார்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்குவார்கள் வேப்பம் பூ, வெல்லம் உப்பு, புளி மிளகாய் மாவடு என்று ஆறு பொருட்கள் கலந்திருக்கும் அன்றைக்கு போளி, பால் பாயாசம், புளியோதரை முதலியவற்றை விசேஷமாகச் செய்வார்கள்.
யுகாதி தினத்தன்று ஒரு ஜோதிடரை வீட்டிற்கு வரவழைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.கோவில்களில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச் சிகளும் நடக்கும்.
இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும் என்பது நம்பிக்கை.
Hindusthan Samachar / Durai.J