Enter your Email Address to subscribe to our newsletters
ஒடிசா, 30 மார்ச் (ஹி.ச.)
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய ஆதரவாளர் வி.கே.பாண்டியனின் மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விருப்ப ஓய்வு பெற்றார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன், ஒடிசா முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்.
பின் 2023ஆம் ஆண்டில் தனது சொந்த விருப்பத்தின் பேரில் விருப்ப ஓய்வு பெற்று பிஜு ஜனதாதளம் கட்சியில் இணைந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் தோல்வியடைந்ததால் வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவரது மனைவியும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா ஆறு மாத காலம் விடுப்பில் சென்றார். ஆனால், விடுமுறையை நீட்டிப்பதற்கான அவரது விண்ணப்பத்தை ஒடிசா அரசு நிராகரித்தது.
அதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி சுஜாதா விருப்ப ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்தார்.
அதனையேற்று அவரது விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Hindusthan Samachar / Raj