உகாதியை முன்னிட்டு கண்கவர் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மின்விளக்கு மற்றும் மலர் அலங்காரம்
திருப்பதி, 30 மார்ச் (ஹி.ச.)‍ இன்று தெலுங்கு புத்தாண்டு தினமான உகாதியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி ஏழுமலையான் கோவிலை பக்தர்களின் கண்களை கவரும் வகையில் அலங்கார சரவிளக்குகள் மற்றும் பல்வேறு வகையான மலர்களை பயன்படுத்தி அலங்கரித்துள
திருப்பதி


திருப்பதி, 30 மார்ச் (ஹி.ச.)‍

இன்று தெலுங்கு புத்தாண்டு தினமான உகாதியை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி ஏழுமலையான் கோவிலை பக்தர்களின் கண்களை கவரும் வகையில் அலங்கார சரவிளக்குகள் மற்றும் பல்வேறு வகையான மலர்களை பயன்படுத்தி அலங்கரித்துள்ளது.

தெலுங்கு புத்தாண்டு தினம் அன்று தெலுங்கை தாய்மொழியாக கொண்ட பக்தர்கள் ஏராளமான அளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம்.

அந்த வகையில் இன்று தெலுங்கு புத்தாண்டு தினமான உகாதி ஆகையால் ஏழுமலையான் கோவிலில் கண்கவர் வகையில் மின்சார சரவிளக்கு அலங்கார பணிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட உள்ளூர் மலர்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த மலர்களை பயன்படுத்தியும் திருப்பதி ஏழுமலையான் கோவில் யுகாதியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஏழுமலையான் கோவில் முன்பகுதியிலும் பல்வேறு மலர் அலங்கார வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மின்சார விளக்கு வேலைப்பாடுகள் காரணமாக ஜொலிக்கும் ஏழுமலையான் கோவிலையும் ஏழுமலையான் கோவிலில் செய்யப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் பார்க்கும் பக்தர்கள் மெய் மறந்து ரசித்து செல்கின்றனர்.

Hindusthan Samachar / Durai.J