கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கோவை, 31 மார்ச் (ஹி.ச.) கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் சுமார் 8 3/4 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த வழக்கில் தொடர்புடைய கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹைரன் (31) என்பவரை காவல் துறையினர் கைது செய்து ச
குன்றத்தூர் சட்டம்


கோவை, 31 மார்ச் (ஹி.ச.)

கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் சுமார் 8 3/4 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த வழக்கில் தொடர்புடைய கேரளா மாநிலத்தை சேர்ந்த ஹைரன் (31) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அந்த நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அந்த நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த வழக்கின் குற்றவாளியான ஹைரன் குண்டர் தடுப்பு சட்டத்தின்(DRUG OFFENDER) கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.

Hindusthan Samachar / Durai.J