பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி
கோவை, 31 மார்ச் (ஹி.ச.) பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ராவ் மருத்துவமனை சார்பில் அவ்வப்ப
பாக்கத்தான்


கோவை, 31 மார்ச் (ஹி.ச.)

பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ராவ் மருத்துவமனை சார்பில் அவ்வப்போது விழுப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராவ் மருத்துவமனை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பையில் ஏற்படும் எண்டொமெட்ரியோசிஸ் என்னும் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள துவங்கிய இந்த வாக்காதான் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து மேற்கு பெரியசாமி சாலை, டி.பி.சாலை மற்றும் தடாகம் சாலை வழியாக சென்ற இந்த வாக்கத்தான் மீண்டும் ராவ் மருத்துவமனையில் முடிவடைந்தது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை மேலாண் இயக்குனர் ஆஷா ராவ்,

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக அளவிலான வலி இருந்தால் மருத்துவர் களை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அதேபோல் மாதம் ஒருமுறை மருத்துவரிடம் கலந்தாலோசித்து உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் கர்ப்பப்பை புற்று நோய் என்பது ஆரம்பத்திலேயே கலையப்பட வேண்டியது எனவும் அதற்கான ஸ்கிரீனிங் சிகிச்சைகள் இருப்பதால் தங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டு பெண்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Hindusthan Samachar / Durai.J