சிறுவன் ஓட்டிய கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
சென்னை , 1 ஏப்ரல் (ஹி.ச) சென்னை பெரம்பூரை அடுத்துள்ள வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி இன்று(ஏப்ரல் 1) காலை 8.30 மணியளவில் ஒரு கார் படு வேகமாக செல்வதையும் அந்த காரை சிறுவன் ஒருவன் ஓட்டிச்செல்வதையும் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சி அ
சிறுவன் ஓட்டிய கார்  சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து


சென்னை , 1 ஏப்ரல் (ஹி.ச)

சென்னை பெரம்பூரை அடுத்துள்ள வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின்பிரிட்ஜ் நோக்கி இன்று(ஏப்ரல் 1) காலை 8.30 மணியளவில் ஒரு கார் படு வேகமாக செல்வதையும் அந்த காரை சிறுவன் ஒருவன் ஓட்டிச்செல்வதையும் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், அந்த கார், வியாசர்பாடி மேம்பாலம் முடியும் இடத்தில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து காரில் சிக்கி இருந்த 5 படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வியாசர்பாடி போக்குவரத்து போலீசாரும் புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில், காரை ஓட்டிவந்தது 18 வயது சிறுவன் என்பதும் அவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், காரில் வந்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் சவுகார்பேட்டையில் வசித்து வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b