Enter your Email Address to subscribe to our newsletters
ஆந்திரா, 1 ஏப்ரல் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து தமிழக எல்லை பகுதியான பரதராமி பகுதியில் செல்போன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேரில் பரதராமி போலீசார் தமிழக ஆந்திர எல்லை பகுதியான தசராபள்ளி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் (46) சுதாகர் (26 ) என்பதும் ஆந்திராவில் இருந்து சாராயம் கடத்தி வந்து பரதராமி மற்றும் சுற்றி உள்ள கிராம மக்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து விஜயகுமார் மற்றும் சுதாகர் ஆகிய இருவரை கைது செய்த பரதராமி போலீசார் அவர்களிடமிருந்து 3 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J