Friday, 4 April, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சிறப்பு தரிசனம் தற்காலிக ரத்து - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
தூத்துக்குடி, 1 ஏப்ரல் (ஹி.ச.) முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும். கோடை விடுமுறை அதிகரித்துள்ளதால் கோ
திருச்செந்தூரில் சிறப்பு தரிசனம் தற்காலிக ரத்து - கோவில் நிர்வாகம் அறிவிப்பு


தூத்துக்குடி, 1 ஏப்ரல் (ஹி.ச.)

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும்.

கோடை விடுமுறை அதிகரித்துள்ளதால் கோவிலில் கூடும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த வாரத்தில் மூன்று நாட்களுக்கு சிறப்பு தரிசனத்தை கோவில் நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசனம் கிடையாது.

கோடையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, சிறப்பு தரிசனத்தை ரத்து செய்துள்ளோம்.என தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b