Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 11 ஏப்ரல் (ஹி.ச.)
கோவை, துடியலூர் கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனித், தனியாக இருக்கும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டப் பகலில் மர்ம நபர்கள் வீடுகளில் இருந்த பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியது.
இதனை அடுத்து காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர தேர்தல் வேட்டைக்கு பின்பு பல்வேறு மாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்கள் குறைந்த நிலையில், தற்பொழுது மீண்டும் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளது.
இந்நிலையில் கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள டேங்க் ரோடு வீதியில் பட்டப் பகலில் சக்திதாசன் என்பவர் வீட்டிலும் மற்றும் அருகே உள்ள மற்றொரு வீட்டிலும் அங்கு அவர்கள் வைத்து இருந்த செல்போன்களை மர்ம நபர் சாதாரணமாக சென்று திருடிச் சென்று உள்ளார்.
அடுத்தடுத்த வீடுகளில் திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர் வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்தனர்.
அதில் மர்ம நபர் ஒருவர் சாதாரணமாக வீதியில் நடந்து செல்வது போன்று நோட்டமிட்டு சென்று பின்னர் மீண்டும் திறந்து கிடந்த காம்பவுண்டுக்குள் வந்து, செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
யார் அவர் என்பது பற்றி அப்பகுதியில் யாருக்கும் தெரியவில்லை ?
இதனால் அப்பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடைபெறலாம் என அச்சம் அடைந்த சக்திதாசன் அந்தக் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J