Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 12 ஏப்ரல் (ஹி.ச.)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25 வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில், சென்னை அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
இது சென்னையின் 5 வது தோல்வியாகும். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 5 முறை தோல்வியடைந்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
மேலும், சென்னை அணி மற்றும் டோனியின் செய்டல்கள் குறித்து பல விமர்சித்து வருவதோடு, நெட்டிசன்கள் சென்னை அணியை விமர்சித்து மீம்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்றைய தோல்வி மற்றும் தொடர் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறுகையில்,
கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதமாக எதுவும் நடக்கவில்லை. நிறைய சவால்கள் இருக்கிறது. அதையெல்லாம் சமாளித்து தான் ஆக வேண்டும்.
நாங்கள் சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறோம். எங்களது அணுகுமுறையை வேறு அணிகளோடு ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்.
நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. பேட்டிங்கின்போது பந்து கொஞ்சம் நின்றுதான் வந்தது. நாங்கள் பவுலிங் செய்கையில் அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்களுக்கு பார்ட்னர்ஷிகளே அமையவில்லை.
எங்கள் பலம் என்னவோ அதற்கேற்ப ஆடினால் போதும் என நினைக்கிறேன். எங்கள் அனியில் சிறப்பான ஓப்பனர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லா பந்துகளையும் சிக்சர் அடிக்கக் கூடியவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் திறன்வாய்ந்த தரமான பேட்டர்கள்.
ஸ்கோர் போர்டை பார்த்து அழுத்தும் ஏற்றிக்கொள்ளாமல் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தாலே நமக்கு தேவையான ஸ்கோர் வந்துவிடும்.என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / J. Sukumar