ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி - பெங்களூர் எப்.சியை வீழ்த்தி மோகன் பகான் எஸ்ஜி சாம்பியன் பட்டம் வென்றது
கொல்கத்தா , 13 ஏப்ரல் (ஹி.ச.) 11 வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், முன்னாள் சாம்பியன்களான பெங்களூர் எப்.சி - மோகன் பகான் எஸ்ஜி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை இர
பெங்களூர் அணியை வீழ்த்தி மோகன் பகான் சாம்பியன் பட்டம் வென்றது


கொல்கத்தா , 13 ஏப்ரல் (ஹி.ச.)

11 வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில், முன்னாள் சாம்பியன்களான பெங்களூர் எப்.சி - மோகன் பகான் எஸ்ஜி அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் போட்டி மிகவும் பரபரப்பாக பயணித்தது. இறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதையடுத்து கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்தில் மோகன் பகான் அணி ஒரு கோல் அடித்து 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற மோகன் பகான் அணிக்கு ரூ.6 கோடியும், இரண்டாவது இடம் பிடித்த பெங்களூர் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Hindusthan Samachar / J. Sukumar