Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 13 ஏப்ரல்
(ஹி.ச.)
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருவது இயல்பாக மாறிவிட்டது.
ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. நடப்பாண்டில் மார்ச் மாதமே கோடை வெயில் சுட்டெரிக்கிறது.
கோடை விடுமுறை தொடக்கம் எனவே வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழல் நிலவுகிறது.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு படிப்படியாககோடை விடுமுறைவிடப்பட்டு வருகிறது. எனவே பகல் நேரங்களில் வீடுகளில் மின்சாரப் பயன்பாடு என்பது அதிகமாக இருக்கும்.
இது மின் கட்டணத்தை தாறுமாறாக அதிகரிக்க வைத்துவிடும். மின் கட்டண அதிகரிப்பு கடைசியில் மாத பட்ஜெட்டில் துண்டு விழக்கூடும்.
இதனை சமாளிக்க கோடைக் காலங்களில் மின்சாரப் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
இதற்காக வழிமுறைகளை பின் பற்றி மின் கட்டணத்தைகுறைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது,
அதில் முக்கியத்துவம் வாய்ந்த வழிமுறைகள் பற்றி இங்கே காணலாம்,
மின்சாரத்தை சேமிக்க 7 வழிகள் சாதாரண குண்டு பல்புகளை பயன்படுத்த வேண்டாம்.
அதற்கு பதிலாக எல்.இ.டி பல்புகளை பயன்படுத்த வேண்டும்.தேவையற்ற சமயங்களில் மின் விளக்குகள், மின் விசிறிகள் அணைத்து வைக்க வேண்டும்.
ஏசியை ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்துவிட்டு அப்படியே விட்டு விடுவோம்.
இதனால் ஏசியின் ஸ்டெபுலைசர் ஆன் செய்த படியே இருக்கும்.
இது மின்சாரத்தை பயன்படுத்தி கொண்டு தான் இருக்கும்.
எனவே ஏசி மற்றும் ஸ்டெபுலைசர் இரண்டையும் சேர்த்து ஆஃப் செய்து விட வேண்டும்.சாதாரண ஃபேன்களுக்கு பதிலாக பி.எல்.டி.சி ஃபேன்களை பயன்படுத்தலாம்.
இது மின்சாரத்தை சேமிக்க, நீண்ட ஆயுள் அளிக்க, ரிமோட் கண்ட்ரோல் வசதி உள்ளிட்டவற்றை அளிக்கும்.
வீடுகளில் இருக்கும் வாட்டர் ஹீட்டர்கள் மின்சாரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளும்.
எனவே வாட்டர் ஹீட்டர் பயன்பாட்டை குறைக்க முயற்சிக்க வேண்டும்.
சமைப்பதற்கு மின்சார அடுப்புகளை பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும்.
கேஸ் அடுப்புகள் பயன்பாட்டை அதிகப்படுத்தி கொள்ளலாம்.
குளிர் சாதனப் பெட்டியில் தெர்மோஸ்டேட்டை மீடியம் ஆப்ஷனில் வைக்க வேண்டும்.
இதுவே போதிய குளிர்ச்சியை அளித்துவிடும்.
Hindusthan Samachar / B. JANAKIRAM