Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 ஏப்ரல்
(ஹி.ச.)
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அபிஷே் ஷார்மா சதம் அடித்த உடன் வெள்ளை துண்டை சீட்டை ரசிகர்கள் மத்தியில் காண்பித்தார். அந்த துண்டு சீட்டில் இருந்த வார்த்தைகள் தற்போது டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 27வது போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்களைக் குவித்தது. இதில், பிரியான்ஷ் ஆர்யா 36 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 42 ரன்னும் எடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ஸ்ரேயஸ் அய்யர் 36 பந்தில் 6 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசி 82 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணியில் ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
பின்னர் 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் தொடக்கம் முதலே சிக்சர், பவுண்டரிகளை விளாசி, முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்ந்தனர்.
டிராவிஸ் ஹெட் 66 ரன்னில் அவுட்டான நிலையில், அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். பஞ்சாப் அணியை அலறவிட்ட அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 141 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில், 9 பந்துகள் மீதமிருக்க 18.3 ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதனிடையே அபிஷேக் சர்மா 40 பந்துகளில் சதமடித்த உடன் அதனை மைதானத்தில் உற்சாகமாக கொண்டாடினார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்த ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் இருந்தார் காண்பித்தார். அந்த துண்டு சீட்டில் இருந்த வார்த்தைகள் தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில் 'This one is for Orange Army' (ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே, இது உங்களுக்காகத்தான்) என எழுதப்பட்டிருந்தது.
கடந்த ஐபிஎல் சீசனில் இறுதி போட்டி வரை சென்ற சன்ரைசர்ஸ் அணி நடப்பு தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி சன்ரைசர்ஸ் மீதான நம்பிக்கையை வீரர்கள் மீண்டும் கொண்டு வந்துள்ளனர். அதை வெளிப்படுத்தும் விதமாகவே அபிஷே் ஷார்மா அந்த துண்டு சீட்டை காண்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
Hindusthan Samachar / B. JANAKIRAM