Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 14 ஏப்ரல்
(ஹி.ச.)
விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர், தொழிற்சங்கவாதி என பல தளங்களில் இயங்கி வருபவர் கலைப்புலி ஜி.சேகரன் இன்று காலமானார். அவருக்கு வயது 73.
சினிமா விநியோகஸ்தராக தனது கரியரை தொடங்கியவர் ஜி.சேகரன். பின்னர் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராகவும் ஆனார். 1985-ம் ஆண்டு வெளியான ‘யார்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
1988-ம் ஆண்டு ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்’ படத்தை இயக்கினார். ‘காவல் பூனைகள்’, ‘உளவாளி’ என அடுத்தடுத்து இயக்கத்தில் கவனம் செலுத்தினார். விநியோஸ்தர்கள் சங்க தலைவராக இருந்தார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டகலைப்புலி ஜி. சேகரன் இன்று உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்தார்.
அவருக்கு வயது 73. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராயபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. கலைப்புலி ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / B. JANAKIRAM