Enter your Email Address to subscribe to our newsletters
சீனா, 14
ஏப்ரல்(ஹி.ச.)
சீனாவுக்கு அதிகமான வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதேபோல் சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி வரிகளை விதித்து வருகிறது.
இருநாடுகள் இடையே வர்த்தக போர் வெடித்துள்ள நிலையில் வியட்நாமை வைத்து சீனா செய்யும் கோல்மால் வேலையை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளதோடு, சீனா - வியட்நாமின் கூட்டு சதியை முறியடிக்க டொனால்ட் டிரம்ப் அதிரடி காட்டினார். இப்படி சீனாவால் சிக்கலில் சிக்கிய வியட்நாம் இப்போது அமெரிக்காவிடம் கெஞ்ச தொடங்கி உள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நீடித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதுமே சீனாவை குறிவைத்து அதிகமான வரிகளை விதித்து வருகிறது. இதுவரை சீனாவுக்கு 145 சதவீத வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனா 125 சதவீத வரியை விதித்துள்ளது.
இதனால் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் என்பது பெரிய பாதிப்பை சந்திக்க உள்ளது. அதோடு அமெரிக்கா, சீனா வர்த்தகர்கள் தங்களின் ஏற்றுமதிக்கு மாற்று நாடுகளை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்கிடையே தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வியட்நாமை சிக்க வைத்த சீனா
அதாவது சீனா தனது அண்டை நாடான வியட்நாமை, அமெரிக்காவிடம் வசமாக சிக்க வைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள வியட்நாம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கெஞ்ச தொடங்கி உள்ளது. ‛‛சீனாவுக்கு நாங்கள் உதவி செய்யமாட்டோம். எங்களை விட்டு விடுங்கள்'' என்று வியட்நாம், அமெரிக்காவிடம் கூறி வருகிறது. அமெரிக்கா - சீனா வர்த்தக போருக்கு நடுவே தேவையின்றி வியட்நாமின் பெயர் வருவது ஏன்? வியட்நாமை அமெரிக்கா கதறவிட என்ன காரணம்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அதாவது சீனாவும், வியட்நாமும் அண்டை நாடுகள். இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றனர். இதில் சீனா பெரிய வல்லரசாக இருக்கிறது. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் பெரிய சக்தியாக மாற வேண்டும் என்ற முனைப்பில் சீனா உள்ளது. ஆனால் வியட்நாம் அப்படியில்லை. மிகவும் சிறிய நாடு தான். அந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 10 கோடி என்ற அளவில் தான் உள்ளது. அதேபோல் பொருளாதாரத்தில் வியட்நாம் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. ஆனால் இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் அமெரிக்காவும், வியட்நாமும் கம்யூனிஸ்ட் தேசமாக உள்ளது.
டிரம்பால் கதறும் வியட்நாம்
மேலும் சீனா - வியட்நாம் இடையே நல்ல உறவு என்பது உள்ளது. இதற்கிடையே தான் கடந்த 2ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட 100க்கும் அதிகமான வரிகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். அந்த தினத்தை ‛விடுதலை நாள்' என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அன்றைய நாளில் இந்தியாவுக்கு 26 சதவீத வரி விதிக்கப்பட்டது. சீனாவுக்கு 34 சதவீத வரியும், வியட்நாமுக்கு 46 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. இந்தியா, சீனா ஆகியவை அமெரிக்காவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு, அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிறது. இதனால் டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனாவை குறிவைத்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் குட்டி நாடான வியட்நாமுக்கு சீனா, இந்தியாவை விட டொனால்ட் டிரம்ப் கூடுதலாக 46 சதவீத வரியை விதித்தது பலருக்கும் கேள்வியை எழுப்பியது. இதற்கு சீனா செய்த மோசடியும், அதற்கு வியட்நாம் துணை போனதும் தான் முக்கிய காரணம். அதாவது சீனாவை டொனால்ட் டிரம்ப் இப்போது மட்டும் எதிர்க்கவில்லை. அமெரிக்க அதிபராக முதல் முறையாக கடந்த 2017 -2021 ஜனவரி மாதம் வரை இருந்தபோதும் கடுமையாக எதிர்த்தார். சீனா மீது வரிகளை விதித்தார். இதனால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி சென்றால் அதிகமாக வரி செலுத்த வேண்டி இருந்தது.
வியட்நாம் ஸ்டிக்கரில் அமெரிக்க பொருட்கள்
இதனால் சீனா தனது பொருட்களை வியட்நாமுக்கு அனுப்பி அங்கு Made In Vietnam என்ற ஸ்டிக்கரை ஒட்டி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. இது எம்ஜிஆர் கால டெக்னிக். பழைய சினிமா படங்களில் கன்னத்தில் ஒரு இடத்தில் மச்சம் அல்லது முகத்தில் மீசை வைத்து கொண்டால் மாறுவேடம் போட்டதாகவும், அவரை மற்றவர்களால் அடையாளம் காண முடியாது என்றும் காட்டப்பட்டு இருக்கும். அப்படி தான் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு Made In Vietnam என்ற ஸ்டிக்கர் ஒட்டி இது வியட்நாம் பொருள் தான் என்று சீனா, அமெரிக்காவுக்கு அனுப்ப லாபம் சம்பாதித்தது. இதன் பின்னணி என்னவென்றால் சீனாவை ஒப்பிடும்போது வியட்நாமில் இருந்து அமெரிக்கா செல்லும் பொருட்களுக்கு வரி என்பது குறைவு. இப்படியாக தனது நட்பு நாடான வியட்நாமை வைத்து சீனா தனது பொருளை அமெரிக்காவுக்கு விற்பனை செய்து பல லட்சம் கோடிகளை குவித்தது. இந்த பொருட்கள் சீனாவில் இருந்து கண்டெய்னர்களில் வியட்நாமுக்கு கொண்டு வரப்பட்டு Made in vietnam என்று ஸ்டிக்கர் ஒட்டி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் வியட்நாம் எல்லையாக உள்ள வியட்நாமின் லாங் சன் மாகாணத்தின் ஹூ நிங்கி எல்லையில் கண்டெய்னர்கள் லாரிகள் அதிகமாகும் காத்திருக்கிறது
அமெரிக்கா - வியட்நாம் பிசினஸ் என்ன?
இதனால் ஆண்டுதோறும் வியட்நாமில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வந்ததோடு, சீனாவில் இருந்து வியட்நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் எண்ணிக்கையும் அதற்கேற்க கூடியபடியே இருந்தது.. கடந்த 2024ம் ஆண்டில் சீனாவிடம் இருந்து வியட்நாம் 144 பில்லியன் அமெரிக்க டாலர் பொருட்களை இறக்குமதி செய்து அமெரிக்காவுக்கு 136 பில்லியன் அமெரிக்க டாலர் பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் சீனா - வியட்நாம் இடையேயான வர்த்தகம் மற்றும் அமெரிக்கா - வியட்நாம் இடையேயான வர்த்தகம் என்பது சில பில்லியன் அளவுக்கு மட்டுமே வித்தியாசமாக இருந்தது.
வியட்நாம் அளவில் சிறிய நாடாக இருக்கும்போது சீனாவிடம் இருந்து அவ்வளவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன்மூலம் சீனாவின் பொருட்கள் வியட்நாம் வழியாக அமெரிக்காவுக்கு Made in Vietnam என்ற ஸ்டிக்கருடன் ஏற்றுமதி செய்யப்படுவதை அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டுபிடித்தார். வியட்நாமின் இந்த செயல் பற்றி அமெரிக்க அதிபர் வெள்ளை மாளமிகையின் வர்த்தக பிரிவு ஆலோசகர்களில் ஒருவரான பீட்டர் நாவ்ரோவும் கவலை தெரிவித்து இருந்தார்.
அமெரிக்காவிடம் பணிந்த வியட்நாம்
இதனால் சீனாவுக்கு துணை போகும் வியட்நாமுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்து அவர் 46 சதவீத வரிகளை டிரம்ப் விதித்தார். இந்த வரி விதிப்பால் ஷாக்கான வியட்நாம் தற்போது அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. கடந்த 2 ம் தேதி விதித்த வரிகளை சீனாவை தவிர பிற நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இந்த வேளையில் வியட்நாம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
அதுமட்டுமின்றி வியந்டாவின் துணை பிரதமர், அமெரிக்காவின் வர்த்தக துறைஅதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். ‛‛சீனாவுக்கு இனி உதவி செய்ய மாட்டோம். சீனாவின் பொருட்களை எங்களின் பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யமாட்டோம். எங்களை விட்டு விடுங்கள். நாங்கள் பாவம். அமெரிக்காவின் கூடுதல் வரியை எங்களால் தாக்கு பிடிக்க முடியாது. இதனால் 46 சதவீத வரியை 22 - 28 சதவீதமாக குறைக்க வேண்டும்'' என்று வியட்நாம் கதற தொடங்கி உள்ளது.
சீனாவுக்கு பிரச்சனை
வியட்நாமின் இந்த கோரிக்கைை அமெரிக்கா ஏற்கலாம் என்றே சொல்லப்படுகிறது. இது நடக்கும்பட்சத்தில் அமெரிக்காவுக்கு வியட்நாம் வழியாக ஸ்டிக்கர் ஒட்டி சீனாவின் பொருட்கள் செல்லாது. இது சீனாவுக்கு இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்
Hindusthan Samachar / B. JANAKIRAM