60 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் பெண்கள் குழு!
வாஷிங்டன் , 14 ஏப்ரல் (ஹி.ச.) 60 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று இன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. கடந்து 1963 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டைச் சேர்ந்த்ய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளிக்கு பயணம் மேற்
விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் பெண்கள் குழு


வாஷிங்டன் , 14 ஏப்ரல் (ஹி.ச.)

60 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று இன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. கடந்து 1963 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டைச் சேர்ந்த்ய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அதன் மூலம் விவெளிக்கு பயணித்த முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

தற்போது, வேலண்டினா தெரஸ்கோவாவின் விண்வெளி பயணத்தை தொடர்ந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவினர் இன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த குழுவின் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் காதலியும், செய்தி தொகுப்பாளருமான லாரென், பிரபல அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், உயிரி விண்வெளி ஆராய்ச்சியாளர் அமாண்டா குயேன் என 6 பெண்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தொழிலதிபர் ஜெஃப் பெசோஸ் விண்வெளி சுற்றுலாவிற்காக தொடங்கிய ‘புளு ஆரிஜின்’ (Blue Origin) நிறுவனத்திற்கு சொந்தமான ‘நியூ ஷெப்பார்டு’ விண்கலம் மூலம் இந்த குழுவினர் விண்வெளி பயணம் மேற்கொள்கின்றனர்.

இன்று (ஏப்ரல் 14) வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ‘நியூ ஷெப்பார்டு’ விண்கலம் ஏவப்பட உள்ளது.

பூமியின் வளிமண்டலத்தை தாண்டி விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசையற்ற நிலையை உணர்ந்த பிறகு இந்த குழுவினர் மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / J. Sukumar