Enter your Email Address to subscribe to our newsletters
அசாம், 15 ஏப்ரல் (ஹி.ச)
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம் மாநிலத்தில் இனி அரசின் அனைத்து உத்தரவுகளிலும் அதிகாரப்பூர்வமொழியான அசமி மொழி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் உத்தரவுகள் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் அசமி மொழி கட்டாயம் எனவும் அசமில் உள்ள பாரக் பள்ளத்தாக்கு மற்றும் BTR ஆகிய பகுதிகளில் அசமி மொழியுடன் பெங்காலி மற்றும் போடோ ஆகிய மொழிகளும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசின் சார்பில் வெளியிடப்படும் விதிமுறைகள் உத்தரவுகள் பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவு திட்டங்களுக்கான விதிமுறைகள் ஆகியவை இனி ஆங்கிலம் மட்டுமின்றி அசமி மொழியிலும் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மத்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள் உத்தரவுகள் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை வெளியிடப்பட்ட 30 நாட்களில் அசமி மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Raj