Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை , 15 ஏப்ரல் (ஹி.ச.)
வெயில் காலத்தில், வெப்பத்தை தாங்கி, நல்ல மகசூல் கொடுக்கும் பயிர்களில் எள், தக்காளி, மற்றும் கொத்தமல்லி முக்கியமானவையாகும்.
எள் சாகுபடிக்கு வைகாசி பட்டம் ஏற்றதாக இருக்கும். வண்டல் மற்றும் செம்மண் கலந்த நிலத்தில் இது நன்றாக வளரும். தக்காளி சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் உகந்தது. வெயில் காலத்தில் கொத்தமல்லி இலைகள் வதங்காமல் இருக்க நிழல் வலை அமைத்து சாகுபடி செய்யலாம்.
வாழை, நெல் போன்ற பயிர்களும் வெயில் காலத்தில் சாகுபடி செய்ய ஏற்றவை. மேலும், வெயில் காலத்தில் நன்செய் நிலத்தில் நேந்திரன் மற்றும் ரொபஸ்டா ரக வாழைகளை பயிரிடலாம்.
வெயில் காலத்தில் சாகுபடி செய்யும் போது, பயிர்களுக்கு போதுமான தண்ணீர், உரம் மற்றும் பூச்சி மருந்து தெளிப்பு போன்றவற்றை கவனிக்க வேண்டும்.
Hindusthan Samachar / J. Sukumar