அதிமுகவை பழனிசாமி தலைமை தாங்குகிறார் என்றால், அவர் தான் கூட்டணியை அறிவித்து இருக்க வேண்டும் -தொல் திருமாவளவன்
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச.) அதிமுக பாஜக கூட்டணி சமீபத்தில் உறுதியானது. இந்நிலையில் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக கூட்டணியை அமித் ஷா தலைமை தாங்கி அறிவிக்கிறார். அதிமுகவை பழனிசாமி தலைமை தாங்குகிறார் எ
திருமாவளவன்


சென்னை, 15 ஏப்ரல்

(ஹி.ச.)

அதிமுக பாஜக கூட்டணி சமீபத்தில் உறுதியானது. இந்நிலையில் கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,

அதிமுக கூட்டணியை அமித் ஷா தலைமை தாங்கி அறிவிக்கிறார். அதிமுகவை பழனிசாமி தலைமை தாங்குகிறார் என்றால், அவர் தான் கூட்டணியை அறிவித்து இருக்க வேண்டும். அப்படி அறிவித்து இருந்தால், பழனிசாமி சுதந்திரமாக முடிவு எடுத்து இருக்கிறார் என நம்ப முடியும்.

அதிமுக கூட்டணியில் அவர்களின் தொகுதியை பறித்து, அதில் பெறும் வாக்குகளைத் தங்களின் வாக்குகள் என பாஜக கூற நினைக்கிறது. அதிமுகவை மெல்ல மெல்ல தேய நினைப்பது தான். ஒரு பெரிய திராவிட இயக்கமான அதிமுகவை அழித்து விட்டால், அடுத்தப் பெரிய சக்தியான திமுகவை வீழ்த்தி விட முடியும். ஒட்டுமொத்தமாகப் பெரியாரின் அரிசுவடிகளை அழித்து விட முடியும் எனக் கணக்குப் போடுகிறார்கள். என்று பேசினார்.

Hindusthan Samachar / B. JANAKIRAM