Enter your Email Address to subscribe to our newsletters
காரைக்கால், 15 ஏப்ரல் (ஹி.ச.)
காரைக்கால் நகர காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் வினோத் (30) இரவு நேரத்தில் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கடற்கரை அருகே அலையாத்தி காடு ஒட்டி வாய்க்காலில் ஒரு உருவம் துடித்துக் கொண்டிருப்பது கண்டு அருகில் சென்றுள்ளார்.
அப்போது மாடு ஒன்று தலை மூழ்கி கால் சேற்றில் சிக்கியவாறு உயிருக்கு போராடியதைக் கண்டு அப்பகுதியில் சென்று இளைஞர்களை அழைத்து வாய்க்காலில் இருந்து மாட்டை போராடி தூக்கி கரைக்கு கொண்டு வந்தனர்
அப்போது பசு மாட்டின் வயிறு முழுவதும் நீர் நிரம்பி உள்ளதை கண்டு காவலர் கால்நடை மருத்துவர்கள் தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் மாட்டிற்கு முதலுதவி காவலர் வினோத் அளித்து மாட்டின் வயிற்றில் சுமார் ஒரு மணி நேர அழுத்தி நீரை வெளியேற்ற முயற்சித்தார் மாடு அவரை பயத்தில் உதைக்க முயற்சித்தும் கண்டுக்காமல் மேலும் மாட்டை எந்திரி எந்திரி என்று கூறியவரே வெகு நேரம் முதலுதவி அளித்துள்ளார்.
மருத்துவர்கள் வராததாலும் பலன் அளிக்காமல் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.
இறந்த மாட்டை கண்டு காவலர் வினோத் கண்ணீர் விட்டவாறு அழுது கொண்டு அங்கும் இங்கும் மாட்டை சுற்றியே காவலர் அலைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / Durai.J