Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 15 ஏப்ரல் (ஹி.ச)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஆதரித்துள்ளது பிஜேபி பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்க பார்க்கின்றது. அரசியலமைப்பு சட்டத்தை நசுக்க பார்க்கின்றது நடைமுறைப்படுத்த மறுக்கின்றது.
ஆகையால் தான் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு வாங்கி வருகின்றோம் ஆகவே இந்த திர்மானத்தை நாங்கள் ஆதரித்து இருக்கின்றோம் ஆகவே ஒவ்வொரு மாநிலத்தின் உரிமையை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் அளிக்க வேண்டும்.
அதிமுக ஏன் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை அவர்கள் ஏன் ஆதரித்து பேசவில்லை அதிமுக பாஜக தமிழக மக்களின் உரிமைகளை மறுக்கின்றார்களா.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மாநில உரிமை என்பதில் அதிமுக இதில் கலந்துகொண்டு பேசியிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / Raj