Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 2 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை எழும்பூரில் இருந்து மண்டபம் நோக்கி வந்த ராமேஸ்வரம் விரைவு ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில், திருச்சி ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையம் வரை பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை இன்று (ஏப்ரல் 02) போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ரயிலில் பயணம் செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போது, 19.700 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதேஷ் மொகாந்தி (28) மற்றும் பிரியா பாரத் மொகாந்தி (40) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Hindusthan Samachar / Durai.J