கரூரில் ஆமையுடன் அரசு அலுவலகத்திற்க்கு சென்ற சமூக ஆர்வலர்
கரூர், 2 ஏப்ரல் (ஹி.ச.) கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேல அக்ரஹரத்தை சேர்ந்த அமிர்த ஆனந்தன் கடந்த மாதம் 11-ம் தேதி அப்பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றிருந்தார். அவரது கையில் வைத்திருந்த சாக்கு பையில் ஒரு ஆமையும் போ
கைது


கரூர், 2 ஏப்ரல் (ஹி.ச.)

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேல அக்ரஹரத்தை சேர்ந்த அமிர்த ஆனந்தன் கடந்த மாதம் 11-ம் தேதி அப்பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றிருந்தார்.

அவரது கையில் வைத்திருந்த சாக்கு பையில் ஒரு ஆமையும் போட்டு வைத்திருந்தார்

அதை அலுவலகத்தின் முன்பு வாசல் முன்பு வைத்து விட்டு அங்கிருந்து பெண் ஊழியர்கள் மகேஸ்வரி மற்றும் உர விற்பனையாளர் பாபு சங்க செயலாளர் சிவராஜ் ஆகியோர மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சங்கச் செயலாளர் சிவராஜ் மாயனூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார் மேலும் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆமை இருந்த சாக்கு பையை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தினர் போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கூட்டுறவு சங்க பணியாளர்களை மிரட்டியதாகவும் அவதூறு ஏற்படுத்தியது, விலங்குகள் தடுப்புச் சட்ட பிரிவில் ஆமை துன்புறுத்தியது ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அமிர்த ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / Durai.J