வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பாடைகட்டி தூக்கி வந்ததால் பரபரப்பு
நாகப்பட்டினம், 2 ஏப்ரல் (ஹி.ச.) எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்
போராட்டம்


நாகப்பட்டினம், 2 ஏப்ரல் (ஹி.ச.)

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒருபகுதியாக நாகை அபிராமி சன்னதி திடலில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முத்தலாக், குடியுரிமை உள்ளிட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக நாகை பேக்குளத்தில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான பதாகைகள் ஒட்டப்பட்ட சவப்பெட்டி பாடையை தூக்கிவந்து தங்களது எதிர்ப்பை எஸ்டிபிஐ கட்சியினர் பதிவு செய்தனர்.

Hindusthan Samachar / Durai.J