Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 ஏப்ரல்
(ஹி.ச.)
விஜயின் சச்சின் திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்கை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஜான் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், நடிகர் விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் 2005 தமிழ்ப் புத்தாண்டில் வெளியான திரைப்படம் சச்சின். 20 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் இன்று ஏப்ரல் 18 ஆம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி உள்ளது. ஒரு புதிய படத்தைப் போலவே டிரைலர் ரிலீஸ், சிங்கிள்ஸ் ரிலீஸ் என இப்படத்திற்கு கடந்த சில வாரங்களாகவே புரோமோஷன் செய்து வந்தார்கள்.
விஜய்யின் ரொமான்ஸ் படங்களில் வந்த கடைசி படம் சச்சின் படம் தான். இந்தக் காலத்து 2k கிட்ஸ்க்கு பொருந்தக் கூடிய ஒரு காதல் கதைதான் சச்சின் திரைப்படம். இந்த ஆண்டு விஜய் நடிக்கும் புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் விஜய் தற்போது நடித்து வரும் 'ஜனநாயகன்' படம் வெளியாகிறது. இதனால் இந்த சச்சின் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்தப் படம் நேற்று (ஏப்.18) திரையரங்குகளில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படம் ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ.12 லட்சத்துக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாகக் இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.6 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் கூடும் என்றும் ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூலை வார இறுதியில் படம் வசூலிக்கும் எனக் கூறப்படுகிறது. 60 ஆயிரம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்ததாக கலைப்புலி தாணு கூறியிருந்தார்.
இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.6 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் கூடும் என்றும் ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூலை வார இறுதியில் படம் வசூலிக்கும் எனக் கூறப்படுகிறது.
Hindusthan Samachar / B. JANAKIRAM