ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலி சாதனியை முறியடித்த ரோஹித் சர்மா
மும்பை , 21 ஏப்ரல் (ஹி.ச.) ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவ
ஐபிஎல் கிரிக்கெட்டில் கோலி சாதனியை முறியடித்த ரோஹித் சர்மா


மும்பை , 21 ஏப்ரல் (ஹி.ச.)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - சூர்யகுமார் யாதவ், ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி மும்பை அணியை வெற்றி பெறச் செய்தனர்.

ரோஹித் சர்மா 77 ரன்களுடம், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடம் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன் அணி, அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த ரோஹித் சர்மா, சில சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

நேற்று ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகம் முறை ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய வீரர்களில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 19 விருதுகள் வென்று சமநிலையில் இருந்த நிலையில், நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ரோஹித், விராட்டை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார்.

அதே சமயம், ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஏபி டெவிலியர் 25 முறை ஆட்ட நாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார்.

இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெய் 22 முறை ஆட்ட நாயகன் விருது வென்று இரண்டாம் இடத்திலும், 20 முறை வென்றுள்ள ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / J. Sukumar