போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் விளையாடுகிறார் - அஸ்வினை விமர்சித்த ஸ்ரீகாந்த்
சென்னை , 22 ஏப்ரல் (ஹி.ச.) 18 வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன், 38 வது லீக் போட்டி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனின் தொடக்கம
அஸ்வினை விமர்சித்த ஸ்ரீகாந்த்


சென்னை , 22 ஏப்ரல் (ஹி.ச.)

18 வது ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதன், 38 வது லீக் போட்டி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இதில், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனின் தொடக்கம் முதலே மோசமான தோல்விகளை பதிவு செய்து வரும் சென்னை அணி, வழக்கம் போல் தடுமாற்றங்களுடன் விளையாட்டி தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து, 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி, விக்கெட் ஏதுமின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரசிகர்கள் மட்டும் இன்றி முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக மூத்த வீரர்கள் அணியில் இருப்பதையும், அவர்கள் விளையாடும் விதமும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த், சென்னை அணி வீரர் அஸ்வினை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது யூடியுப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தால் போட்டியை வென்றிருக்கலாம். ஆனால், அஸ்வின் ரன்கள் கொடுக்க கூடாது, என்ற எண்ணத்தில் தான் பந்து வீசுகிறாரே தவிர விக்கெட்டுகளை எடுக்க விரும்பவில்லை.

மும்பை வீரர்கள் அஸ்வினின் பந்தில் ஒரு ரன்கள் எடுத்து புத்திசாலித்தனமாக விளையாடினார்கள். போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். ஆனால், அஸ்வின் அப்படி செய்வதில்லை.என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / J. Sukumar